removing, changing and / or remodelling THEM WITH REAL SUITABLE REPLACEMENTS


நவராத்திரியில் ஆயுதங்களுக்கு பூஜை - சரிதானா ?


ஆயுத பூஜை என்பது நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் கருவி மற்றும் உபகரணங்களுக்கு ஆண்டிற்கொரு முறை செய்யும் பூசனையாகக் கடைபிடிக்கிறோம். இது தவறு. இதன் பொருள் அதுவல்ல !

இது ஒரு வடமொழிச் சொல்லாகும். ஆ + யுத என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஒன்றிணைக்கப்பட்ட” என்பது பொருளாம். யுத என்றதில் உள்ள “த” எழுத்தினைத் தங்கம் என்பதில் உள்ள ‘த’ போல் உச்சரிக்க வேண்டும். முப்பெருந்தேவியரான கலைவாணி, இலக்குமி, துர்க்கை ஆகியோர் 9 நாட்கள் மகிடாசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் “ஒன்றிணைந்து” அவனை அழித்ததாக தேவீ பாகவத புராணம் கூறும். இதன்படி, நவராத்திரியான 9 நாட்களில் இல்லாத இணைப்பு பத்தாம் நாளில் இணைந்ததை “ஆ + யுத” என்னும் வடமொழிச் சொல்லால் குறிக்கப் புகுந்து, அதனால் நன்மை வெற்றி அடைந்து தீமை அழிக்கப்பட்டதாக நிறுவப்பட்டது. அது 10ம் நாளானதால் தசமி. வெற்றி பெற்றதால் விஜயதசமி !

எனவே மும்மூன்று நாட்களை ஒன்றிணைத்து 9 நாட்கள் முப்பெருந்தேவியருக்கு நடக்கும் பூஜையே ஆயுத பூஜை ! வெறும் 9ம் நாள் பூஜைக்கு அப்பெயர் பொருந்தாது. தவிரவும், இயந்திரம் மற்றும் கருவிகளுக்குச் செய்யப்படும் பூஜையுமல்ல !!